ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தையை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய பொதுமக்கள் - உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸார்

குழந்தையை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய பொதுமக்கள் - உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸார்

ஆரணியில் பொதுமக்களால் தாக்கப்பட்ட பெண்

ஆரணியில் பொதுமக்களால் தாக்கப்பட்ட பெண்

வேலூரியிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் செல்ல பணம் இல்லாத காரணத்தினால் பேருந்திலிருந்து அந்தப்பெண் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் 3வயது குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கபட்ட பெண்ணை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஓப்படைத்ததால் பரபரப்பு.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில்குமார் அஞ்சலா தம்பதியினரின் 3வயது ஆண் குழந்தை சந்தோஷ் வீட்டின் வெளியே இன்று காலை விளையாடி கொண்டிருந்தார். மேலும் அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அறிமுகம் இல்லாத ஓரு பெண் குழந்தை கையில் தூக்கி வைத்து கொண்டிருந்த கண்டு குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  Also Read: இப்படியும் ஒரு பெண்ணா? கணவரை அம்மா உடன் பகிர்ந்த மகள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

  அதனையடுத்து அந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் குழந்தையின் உறவினர்கள் ஆகியோர் சராமரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்த சம்பவடத்திற்கு வந்த கண்ணமங்கலம் போலீசார் அந்த பெண்ணை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் என்பதும் சிறிது காலமாக கணவனை பிரிந்து மனநலம் பாதிக்கபட்டு வந்துள்ளதாகவும் இன்று காலை வேலூரியிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் செல்ல பணம் இல்லாத காரணத்தினால் பேருந்திலிருந்து கண்ணமங்கலம் பேருந்து இறக்கிவிட பட்டுள்ளதாகவும் கண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் வழியாக மனநல பாதிக்கபட்ட பெண் நடந்து சென்ற போது குழந்தையை கண்டு தூக்கி வைத்து கொண்டுள்ளார்.

  Also Read:  பல்லடத்தில் குடியிருப்பில் நோட்டம் பார்த்த வடமாநில இளைஞர் - மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

  அதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குழந்தையை கடத்தி முயன்றதாக கருதி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஓப்படைத்தாகவும் பின்னர் மனநல பாதிக்கபட்ட பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தன.

  செய்தியாளர்: மோகன்ராஜ் (ஆரணி)

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Child, Crime | குற்றச் செய்திகள், Harassed mentally, Woman