திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் உள்ள தம்டகோடி கிராமத்தில் உள்ள திருமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இந்த கோவில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியைக்கும் வேலூரை சேர்ந்த இளம் தொழில் அதிபருக்கும் நேற்று இந்து கலாச்சார முறைப்படி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வேலூர் மாநாகராட்சி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜி வயது (67), ரோஜா வயது (57) இந்த தம்பதியினரின் மூத்த மகன் கோபி வயது (32) இவர் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் சொந்தமாக தொழிலை அமைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் இளம் தொழிலதிபர் ஆவார்.
இந்நிலையில் இவர் ஜெர்மன் நாட்டில் அரசு கல்லூரியில் அரசு பேராசிரியையாக பணிபுரியும் ஐரீஸ் இவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களுடைய காதலை பற்றி ஒருவொருக்கொருவர் தங்களுடைய பெற்றோர்களிடம் கூறினார்.
இதனை இருவர்களுடைய பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் காதலர்கள் கோபி மற்றும் ஜரீஸ் திருமண எப்படி செய்வது என்று ஆலோசித்துள்ளனர். அப்போது ஜரீஸ் நம்முடைய திருமணம் இந்து முறைப்படி நடைப்பெற வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்து கலாச்சார முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்ய விருப்பபட்டதை பெற்றோர்களிடம் கூறி அதற்கும் சம்மதம் வாங்கியுள்ளனர்.

திருமணம்
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள தம்மகோடி திருமலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரும் உறவினர்களும் சுற்றத்தாரும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதுகுறித்து மணமகள் ஐரிஸ் கூறுகையில், நமது உலகில் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் உலகிற்கே வழிகாட்டியாகும். மிக முக்கியமானதும் ஆகும். இந்திய குடும்ப வாழ்க்கை முறை உலகிற்கு முன்னுதாரணமாகும். இந்தியாவில், குறிப்பாக தமிழ்கத்தின் குடும்ப நடத்தும் வாழ்க்கை முறையை நான் பார்த்துள்ளேன். அது எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் மணமகனை விரும்பி திருமணம் செய்துகொண்டேன் எனக் கூறினார்.

ஜெர்மன் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த வேலூர் இளம் தொழிலதிபர்
Must Read : இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிலும் ஏற்படும் - ப.சிதம்பரம் எச்சரிக்கை
முன்னதாக கோயில் விழாக்குழு தலைவர் ராஜூ தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ம.மோகன்ராஜ், ஆரணி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.