9 வயது சிறுவனின் சொல்லுக்கு கட்டுப்படும் 427 மலைகிராமங்கள் - மலைவாழ் மக்களின் நம்பிக்கையும் ஆச்சர்யமும்

சிறுவன் சக்திவேல்

ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையில் நாட்டாமை மற்றும் தலைமை நாட்டாமை என்பது ஒரு முக்கிய பொறுப்பாகும்.அவரின் உத்தரவுப்படியே மலைவாழ் மக்கள் அனைவரும் செயல்படுவார்கள்.

 • Share this:
  ஜவ்வாது மலை 3 மாவட்டங்களைச் சேர்ந்த 427 மலை கிராமங்களுக்கு 9 வயது சிறுவன் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது.திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஜவ்வாது மலையில் 427 மலை கிராமங்கள் 36 கிராமங்களாக ஆக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த மலை கிராமங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நாட்டாமை, ஒரு ஊர் கவுண்டர், மூப்பன் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள்தான் கிராமத்தில் ஏற்படும் சொத்து தகராறு குடும்பத்தகராறு உள்ளிட்டவைகளை பேசி சுமூகமாக தீர்வு செய்வார்கள்.
  மலைவாழ் மக்கள் இதுவரை நாட்டாமை தீர்ப்பிற்கு அடிபணிந்து சட்டத்திட்டங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

  மலைவாழ் மக்களிடையே திருமணம் என்றால் மலையில் உள்ள 427 மலை கிராமங்களில் உள்ள மக்களும் திருமணம் என்பது தலைமை நாட்டாமை முன்னாள் மணமகன் மணமகள் குறித்து இனம் மற்றும் வயது அவர்களது பூர்வீகம் குறித்து விசாரித்த பின்னரே தலைமை நாட்டாமை முன்னிலையில் அவர் கைகளால் தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடைபெறுவது வழக்கம்.

  Also Read: திருநங்கை என்று ஒதுக்கி விடாமல் பெற்றோர் அரவணைத்ததால் சாதித்தேன் - எஸ்.ஐ சிவன்யா

  அதேபோல் ஊர் திருவிழா என்றால்  தலைமை நாட்டாமை தான் முடிவு செய்ய வேண்டும் மலைவாழ் கிராமங்களில் அவரின் உத்தரவுபடி தான் கிராம மக்கள் நடந்து கொள்வார்கள்.
  அதுமட்டுமின்றி மலைவாழ் மக்களுக்கு இடையே ஏற்படும் குடும்ப தகராறு சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தலைமை நாட்டாமை முன்னிலையில் ஊர் நாட்டாமைகள் பேசி சுமூகமாக தீர்த்து வைப்பார்கள்.

  ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையில் நாட்டாமை மற்றும் தலைமை நாட்டாமை என்பது ஒரு முக்கிய பொறுப்பாகும்.
  அவரின் உத்தரவுப்படியே மலைவாழ் மக்கள் அனைவரும் செயல்படுவார்கள். ஜவ்வாது மலையிலுள்ள மலை கிராமங்களில் தலைமை நாட்டாமையாக மல்லிமடு கிராமத்தை சேர்ந்த 87 வயதான சின்னாண்டி என்பவர் கடந்த 80 ஆண்டு காலமாக இந்த பதவியை வகித்து வந்தார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் குன்றி தலைமை நாட்டாமை இறந்துவிட்டார்.

  நாட்டாமை தேர்வு செய்யும் நிகழ்வு


  இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக தலைமை நாட்டாமை பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த 36 ஊர் நாட்டாமைகள் 36 ஊர் கவுண்டர்கள் 36 மூப்பன் ஆகியோர் ஒன்றிணைந்து மலைவாழ் மக்களின் தெய்வ நம்பிக்கை படி இறந்துபோன சின்னாண்டி இடம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு அடுத்த தலைமை நாட்டாமை யாரென்று தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

  Also Read: மணப்பெண் படிப்பைத் தொடர பீகார் கிராம பஞ்சாயத்து அளித்த அதிரடித்  தீர்ப்பு: குவியும் பாராட்டுக்கள்

  தலைமை நாட்டாமையான சின்னாண்டிக்கு  முத்துசாமி, வெள்ளை கண்ணன், பெருமாள் மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட வாரிசுகள் உள்ளனர் இதில் சக்திவேல் உள்ளிட்ட  ஆண் பெண் என 21 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மலைவாழ் மக்களின் தெய்வ நம்பிக்கை படி தெய்வ வாக்கு படி சின்னாண்டி இரண்டாவது மகன் முத்துசாமியின் ஒன்பது வயதான பேரன் சக்திவேல் அடுத்த தலைமை நாட்டாமை ஆக நியமிக்க வேண்டும் என தெய்வ வாக்கு கூறியதால் அதனை ஏற்ற ஊர் கவுண்டர்கள் ஊர் நாட்டாமைகள் ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

  சிறுவன் சக்திவேல்


  இறந்துபோன நாட்டாமையின் வாக்குபடி ஊர் நாட்டாமைகள் ஊர் கவுண்டர்கள் மூப்பன்கள் இணைந்து  சின்னாண்டியி‌ன் பேரனான 9 வயதான சக்திவேலை மலை கிராமங்களில் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்தனர். இந்நிலையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த மலை கிராம மக்களின் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்த சக்திவேலின் சொந்த ஊரான மல்லிமடு கிராமத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.

  ஜவ்வாது மலை உட்பட்ட திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த  நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பன்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மலைவாழ் மக்கள் வழக்கப்படி 9 வயதான சிறுவன் சக்திவேலுக்கு பட்டம் சூட்டி மலைவாழ் மக்களின் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்து செங்கோல் அளித்தனர். தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட சக்திவேல் நாகலூர் கிராமத்திலுள்ள ஊராட்சி  பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  நிகழ்வு


  இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில் ஜவ்வாதுமலை கலாச்சாரத்தை பொறுத்தவரையில் நாட்டாமையின் சொல்படிதான் கிராமமக்கள் செயல்படுவார்கள் அதேபோல மலைவாழ் மக்கள் அனைவரும் கிராமங்கள்தோறும் ஊர் கவுண்டர் நாட்டாமை மூப்பன் போன்ற மூன்று நபர்களின் கட்டுப்பட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்வார்கள் என்றும் மலை கிராமங்களில் உள்ள ஊர் கவுண்டர் ஊர் நாட்டாமை மூப்பன் உள்ளிட்டவர்கள் தலைமை நாட்டாமையின் தீர்ப்புக்கு அடிபணிந்து செயல்படுவார்கள் ஆகவே ஒன்பது வயது சிறுவன் ஆனாலும் அவன் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து தான் மலை கிராம மக்கள் செயல்படுவோம் என்றும் உறுதியுடன் தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் சிறுவனுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு தானாகவே பல்வேறு பிரச்சினைகளை தீர்வு செய்து முடிவு எடுக்கும் அளவிற்கு அவருக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
  427 மலை கிராமங்களைக் கொண்ட ஜவ்வாது மலைக்கு 9 வயது சிறுவன் தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தலைமை நாட்டாமையாக தேர்வு செய்யப்பட்ட சிறுவன் கூறுகையில் தனது தாத்தாவின் வழியில் நின்று அவர் எவ்வாறு பணியாற்றினார் பெரியவர்களின் அறிவுரையை ஏற்ப நான் செயல்படுவேன் என தெரிவித்தார்.

  செய்தியாளர் : அ.சதிஷ் ( திருவண்ணாமலை)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: