குடிபோதையில் மகளிடம் அத்துமீற முயன்ற தந்தை - அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்

திருவண்ணாமலை கொலை

வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு குடிபோதையில் மகளிடம் அத்துமீற முயன்றுள்ளார்.

 • Share this:
  திருவண்ணாமலையை சேர்ந்த  நபர் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40) இவர் தெருக்கூத்து நாடக கலைஞர்,  முருகன் மனைவி மஞ்சு(32) மற்றும் மகள்கள் இரண்டு மகள்கள் மூத்த மகள் ஷர்மிளா வயது 19,முருகனுக்கு குடிபழக்கம் அடிமையானவர்.இந்நிலையில் மனைவி மஞ்சு மற்றும் இரண்டாவது மகள் ஆகிய இருவரும் இன்று காலை திருவண்ணாமலைக்கு சென்று இருந்ததாக சொல்லப்படுகிறது.

  Also Read: கேரள இளம்பெண் மரணம்.. கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டும் பெற்றோர்..வாட்ஸ் அப் சாட்டில் வெளியான அதிர்ச்சித் தகவல்

  இந்த நிலையில் மதியம் குடிபோதையில் விட்டிற்கு வந்த முருகன்  தனியாக இருந்த தனது மூத்த மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பத்மா அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை முருகன் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார்.  இந்நிலையில், மயங்கி விழுந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: குளியல் வீடியோவை படம்பிடித்து, டார்ச்சர் செய்த கணவர்.. போலீஸில் சொல்லி கம்பி எண்ண விட்ட மனைவி

  இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.போலீசார் உயிரிழந்த முருகனின் மனைவி  மஞ்சு மற்றும் மகள் ஷர்மிளா  கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: