ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பள்ளியில் மதிய உணவு மட்டும் சாப்பிட்டு வளரும் பெற்றோரை இழந்த 3 சிறார்கள்... அரசுக்கு உருக்கமான கோரிக்கை

அரசு பள்ளியில் மதிய உணவு மட்டும் சாப்பிட்டு வளரும் பெற்றோரை இழந்த 3 சிறார்கள்... அரசுக்கு உருக்கமான கோரிக்கை

அரசு பள்ளியில் மதிய உணவு மட்டும் சாப்பிட்டு வளரும் பெற்றோரை இழந்த 3 சிறார்கள்... அரசுக்கு உருக்கமான கோரிக்கை

பெற்றோரை இழந்த பிள்ளைகள், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள வீட்டில் எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோரை இழந்த மூன்று சிறார்கள் அரசு பள்ளியில் மதிய உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர். தங்களது கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ஆரணி அருகே ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த டெய்லர் லோகநாதன், வேண்டா தம்பதியினருக்கு கார்த்திகா, நிறைமதி என இரு மகள்களும், சிரஞ்சீவி என்ற மகனும் உள்ளனர். அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கார்த்திகா 10-ம் வகுப்பும், சிரஞ்சீவி 9-ம் வகுப்பும், நிறைமதி 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

  Also Read : தமிழகத்தில் 54 அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று மூன்று குழந்தைகளை காப்பாற்றி வந்த நிலையில், அவரும் மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பெற்றோரை இழந்த பிள்ளைகள், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள வீட்டில் எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

  மதிய வேளையில் பள்ளியில் வழங்கும் சத்துணவை மட்டும் சாப்பிட்டு வரும் பிள்ளைகள் தாங்கள் விடுதியில் தங்கி பயில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். சிறார்களின் வீட்டை மாவட்ட நிர்வாகம் பராமரித்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Thiruvannamalai