முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

சிறுமி கடத்தலில் சிக்கியவர்கள்

சிறுமி கடத்தலில் சிக்கியவர்கள்

திருவண்ணாமலையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபரும், அவரின் இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்திய காதலன், நண்பர்கள் இருவருடன் கைது செய்யப்பட்டது திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும், அந்தப் பகுதியில் பழக்கடை நடத்தி வந்த  விழுப்புரத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலிப்பதாக பழகி வந்து உள்ளனர்.  பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை அவர் தன்னுடன் வருமாறு அழைத்து உள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அவரது நண்பர்கள் 2 பேருடன் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.  இதனையடுத்து ஜூலை 27ம் தேதி அதிகாலையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்தி கொண்டு அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Also Read:  புதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..

இதைத்தொடர்ந்து சிறுமியை தேடிய அவரது பெற்றோர்கள் அவர் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர்களுடன் காரில் திருவண்ணாமலைக்கு வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்த சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களையும் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read:   உங்கள் குழந்தைக்கு இன்னும் ஆதார் அட்டை பதிவு செய்யவில்லையா? வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக அவரது பெற்றோர், மரக்காணம் அருகில் உள்ள பிரம்மதேசம் போலீசில் புகார் செய்து தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பிரம்மதேச போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் நேற்று (ஜூலை 27) மதியம் திருவண்ணாமலைக்கு வந்த பிரம்மதேச போலீசாரிடம் சிறுமி மற்றும் அந்த 3 வாலிபர்களை திருவண்ணாமலை போலீசார் ஒப்படைத்தனர். மேல் விசாரணைக்காக அவர்களை பிரம்மதேச போலீசார் அழைத்து சென்றனர்.

செய்தியாளர் சதீஷ், திருவண்ணாமலை

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Love