முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - மேலும் 3 பேர் கவலைக்கிடம்!

ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - மேலும் 3 பேர் கவலைக்கிடம்!

ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - மேலும் 3 பேர் கவலைக்கிடம்!

ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு - மேலும் 3 பேர் கவலைக்கிடம்!

ஆரணியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 10வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற பெயரில் காதர் பாஷா- அம்ஜத் பாஷா ஆகிய தந்தை-மகன் உணவகம் நடத்தி வருகின்றனர். இவரின் கடையில் துந்தரீகம் பட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவரும், அவரின் மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி (10), மகன் சரண் (14), ஆகியோர் கடந்த புதன்கிழமை உணவு சாப்பிட்டுள்ளனர்.

பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்றனர். அப்போது அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர்.

தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த், சரண், பிரியதர்ஷினி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10வயது சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also read: தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!!

இதனிடையே, இதே உணவகத்தில் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. பலரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உணவகத்துக்கு ஆரணி கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். தொடர்ந்து, உணவகத்தை நடத்தி வரும் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோரை ஆரணி நகர போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது, உணவில் நச்சுப்பொருள் கலந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Briyani, Crime News, News On Instagram, Thiruvannamalai