சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
சித்ரா பவுர்ணமி
  • Share this:
சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில், திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தொலைவுகொண்ட கிரிவலப்பாதையை வலம்வருவார்கள். அதில், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி, நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய கிரிவலம், இன்று மாலை 5-30 மணிவரை நடைபெற உள்ளது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 2900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


First published: April 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading