திருவண்ணாமலை அருகே பயங்கரம் - நாட்டு வெடிகுண்டை பந்து என நினைத்து கடித்த சிறுவன் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வன விலங்கை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டினை பந்து என கருதி கடித்த 7 வயது சிறுவன் படுகாயமடைந்தார்.

  • News18
  • Last Updated: July 6, 2020, 2:00 PM IST
  • Share this:
செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் கமலக்கண்ணன் என்பவரின் 7வயது மகன் தீபக் விளையாடியக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பந்து போல் காணப்பட்ட பொருளை எடுத்து விளையாட்டாக கடித்தான். அப்போது எதிர்பாராமல் அது வெடித்தது.

அதில் தீபக்கின் தாடை மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விசாரணையில் அது விலங்குகளை வேட்டையாக வைக்கப்பட்ட நாட்டு வெடி குண்டு என்பதை போலீசார் கண்டறிந்தனர். வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் குறித்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading