குண்டலினி யோகம் நடத்திய சாமியார் மர்ம பொருள் வெடித்து மரணம்! திருவள்ளூரில் பரபரப்பு

குண்டலினி யோகம் நடத்திய சாமியார் மர்ம பொருள் வெடித்து மரணம்! திருவள்ளூரில் பரபரப்பு
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 10:48 PM IST
  • Share this:
திருவள்ளூர் மாவட்டத்தில், குண்டலினி யோகத்தில் ஈடுபட்ட பிரமச்சாரி கோவிந்தராஜ் என்பவர் மர்மப் பொருள் வெடித்து உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் 50 வயதான கோவிந்தராஜ். இவர் ஜோதிடம், குண்டலினி யோகம், யாகம், சித்த வைத்தியம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். திருவள்ளூர் அருகே இறையாமங்கலம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி 15 ஆண்டுகளாக வசி்த்து வந்தார். அவரது தாய் நங்கநல்லுாரில் இருந்து அடிக்கடி மகன் வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை திடீரென உடலில் தீப்பற்றிய நிலையில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார் கோவிந்தராஜ், காருக்கு அருகில் வந்த உடன், மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த போது அவரது சகோதரி முறையான லாவண்யா என்ற பெண் வீட்டில் இருந்துள்ளார்.


முதற்கட்ட விசாரணையில் யாகம் செய்து கொண்டிருந்த போது அதில் இருந்து மர்மப் பொருள் வெடித்து கோவிந்தராஜின் உடலில் தீப்பிடித்ததாகத் தெரியவந்துள்ளது. கோவிந்தராஜ் உயிரிழப்பு உண்மையில் விபத்தா அல்லது செ்ாத்துக்காக நடந்த கொலையா என போலீசார் விசாரி்தது வருகின்றனர்.

Also Watch : வசியம் செய்ததற்காக நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞர்!

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading