• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருவள்ளூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் திடீரென உருவான 10 அடி ஆழ பள்ளம்.... மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

திருவள்ளூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் திடீரென உருவான 10 அடி ஆழ பள்ளம்.... மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

திருவள்ளூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் திடீரென உருவான 10 அடி ஆழ பள்ளம்

திருவள்ளூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் திடீரென உருவான 10 அடி ஆழ பள்ளம்

திருவள்ளூரில்அரசு பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென்று 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்ப்பட்டதால், வகுப்புகளை  விட்டு மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது நீர்நிலைகள் முழுமையாக நிரம்பிய நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு சீறிப் பாய்ந்து செல்கிறது. வெள்ள நீர் அங்கிருக்கும்  அரசு மேல்நிலைப்பள்ளியில் புகுந்துள்ளது. இதில்  பள்ளி சுற்றுச்சுவர் ,நீர் ஏற்றும் அறை உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தது. பள்ளி கட்டிடங்களின் பேஸ்மெண்ட் அரிப்பு ஏற்ப்பட்டு மணல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டிடம் சிதிலமடைந்தது.

இந்நிலையில் மழை விடுமுறைக்கு பிறகு  இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில்  மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.  நபார்டு திட்டத்தின் கீழ்  10ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முன்று அடுக்கு  கட்டிடத்தின் அஸ்திவாரம் முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டு காணப்பட்டது. அப்போது மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையில்  திடீரென்று 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால், பீதி அடைந்த மாணவர்கள் வகுப்புகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக பள்ளி நிர்வாகம் சார்பாக மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து பள்ளி கட்டடத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்தனர். கட்டிடத்திற்கு அதிக அளவில்  மணல் அரிப்பு ஏற்பட்டு இருப்பதால்  மூன்று மாடி கட்டிடம் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது.

பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உடனடியாக சேதமடைந்துள்ள பள்ளி கட்டடத்தை சீரமைத்து மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: