ஆந்திராவுக்கு பாலீகீட்ஸ் புழுக்கள் கடத்தல்: இளைஞர் கைது!

உவர் நீர் மண்புழுக்கள்

பாலீகீட்ஸ் புழுக்களை அரசின் உத்தரவை மீறி ஆற்றில் இறங்கி எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

 • Share this:
  சென்னை எண்ணூரில்  இருந்து ஆந்திராவுக்கு பாலீகீட்ஸ் புழுக்களை கடத்திய நபரை வனத்துறையினரின் உதவியோடு எண்ணூர் போலீசார் கைது செய்தனர்.

  எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆறும் கடலும் சேரும் இடத்தில் பாலீகீட்ஸ்  எனப்படும் உவர் நீர் மண் புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.  இந்த புழுக்கள் மீன்களுக்கு இயற்கையாகவே இரையாகி மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது.  அதே வேளையில், சிலர் இந்த பாலீகீட்ஸ் புழுக்களை வளர்ப்பு மீன்கள், இறால் ஆகியவற்றுக்கு இரையாக அளிக்கின்றனர். இதன் காரணமாக பாலீகீட்ஸ் புழுக்கள் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.

  பாலீகீட்ஸ் புழுக்களை அரசின் உத்தரவை மீறி ஆற்றில் இறங்கி எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், எண்ணூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அதிக அளவிலான பாலீகீட்ஸ் புழுக்களை ஆந்திராவுக்கு கடத்தி செல்வதாக  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து,  கும்மிடிபூண்டி வனத்துறையினர்   வாகன சோதனையில் ஈடுபட்டு ராஜ்குமாரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்த பாலீகீட்ஸ் புழுக்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் ராஜ்குமாரை எண்ணூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  வழக்கு பதிவு செய்த எண்ணூர் போலீசார் ராஜ்குமாரை  புழல் சிறையில் அடைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: