திரௌபதி அம்மன் கோயில் அருகே மது குடித்ததை தட்டிக்கேட்ட இளைஞரை ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்ற ஆறு பேர்கொண்ட கும்பலை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் அருகே உள்ள பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன், சரண்ராஜ் இருவரும் திரௌபதி அம்மன் கோவில் அருகே மது குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கே வந்த அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கோவில் அருகே மது அருந்தாதீர்கள் என கூறியுள்ளார். இதன் காரணமாக இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து முருகன் தனது கூட்டாளியான திருமுல்லைவாயலை சேர்ந்த தினேஷ் பாபு என்பவருக்கு போன் செய்து தன்னை கார்த்திக் என்பவர் அசிங்கப்படுத்தி விட்டான் அவனைக் கொல்ல வேண்டும். ஆயுதங்களுடன் வந்து அவனை காலி செய்யுங்கள் என கூறியதை தொடர்ந்து அங்கு வாகனத்தில் வந்த திருமுல்லைவாயலை சேர்ந்த தினேஷ் சரண், கலைச்செல்வன் , மிட்டாய் ரஃபி ஆகியோருடன் முருகன் சரன்ராஜ் ஆகிய 6 பேரும் சேர்ந்துக்கொண்டு கார்த்திக்கை வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திகை கொல்ல முயன்ற ஆறு பேரையும் பிடித்து பெரியபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கும்பல்
இதையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : பார்த்த சாரதி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.