• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருட்டுப்போன சைக்கிள்: முதல்வரை டேக் செய்து ட்வீட்: மீட்டுக்கொடுத்த போலீஸ்!

திருட்டுப்போன சைக்கிள்: முதல்வரை டேக் செய்து ட்வீட்: மீட்டுக்கொடுத்த போலீஸ்!

திருட்டுப்போன சைக்கிள்: முதல்வரை டேக் செய்து ட்வீட்: மீட்டுக்கொடுத்த போலீஸ்!

திருட்டுப்போன சைக்கிள்: முதல்வரை டேக் செய்து ட்வீட்: மீட்டுக்கொடுத்த போலீஸ்!

வீட்டின் அருகே அவரது சைக்கிளை நிறுத்தி இருந்த போது ஒரு இளைஞர் அதனை திருடும் வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ட்விட்டரில் டேக் செய்து வெளியிட்டிருந்தார்.

  • Share this:
    திருவள்ளூரில் தனது விலையுயர்ந்த சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததையடுத்து, அவரது சைக்கிளை போலீசார் மீட்டு கொடுத்துள்ளனர்.

    திருவள்ளூரைச் சேர்ந்தவர் அர்சத் அஜ்மல். இவர் ரயில் நிலையம் அருகே உள்ள தனது குடியிருப்பில் விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். அந்த சைக்கிளில் அவ்வப்போது நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சூழலில், கடந்த மாதம் 29-ந் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி  வீட்டின் அருகே அவரது சைக்கிளை நிறுத்தி இருந்த போது ஒரு இளைஞர் அதனை திருடும் வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ட்விட்டரில் டேக் செய்து வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் திருடப்பட்ட சைக்கிளை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    Also read: அடையாளம் தெரியவில்லையா? விமான பயணத்தில் ஆச்சர்யம் அளித்த நபர்.. நினைவில் நின்ற பயணம் என நெகிழ்ந்த தயாநிதி மாறன்!!

    அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர்  நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருடப்பட்ட சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளனர். மேலும், இந்த பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் டேக் செய்துள்ளனர்.

    இதையடுத்து, சைக்கிளை கண்டுபிடித்தமைக்கு  சமூகவலைதளத்தில் திருவள்ளூர் நகர காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: