சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபு என்பவர் தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக
குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண்ணின் தம்பி அப்பகுதியில் உள்ள நடன பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார் அந்த பள்ளியின் ஆசிரியர் பிரபுவும், பெண்ணின் தம்பியும் நண்பர்களாக பழகி வந்தனர். சிறுவனுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி சிறுவனின் சகோதரியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகத் தொடங்கியுள்ளார் பிரபு
நீண்ட நாள் பழக்கம் காதலாக மாற இருவரும் அடிக்கடி தனியாக வெளியே சென்று வந்துள்ளனர். 2019 டிசம்பர் மாதம் பிரபு இளம்பெண்ணை சொகுசு காரில் அழைத்துக் கொண்டு மாதர்பாக்கம் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் பெண்ணுக்கு சாப்பிட பிஸ்கெட் உள்ளிட்ட திண்பண்டங்கள், குளிர்பானம் போன்றவற்றை கொடுத்துள்ளார்.
காதலன் தானே என நம்பி குளிர்பானத்தை குடித்த பெண் சில நிமிடங்களில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். மறுநாள் மயக்கம் தெளிந்து பார்த்த போது ஆடைகள் விலகி தான் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை உணர்ந்த பெண் மனம் உடைந்து அழுதுள்ளார். இதுகுறித்து பிரபுவிடம் கேட்ட போது அவர் திருமணம் செய்து கொள்வோம் என போலி சமாதானம் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
அதைத் நம்பி அவருடன் தொடர்ந்து அடிக்கடி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரபுவின் தாய் ரேவதிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் வரதட்சணையாக நகை, பணம் வேண்டும் என்று பெண்ணிடம் வலியுறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் உடனடியாக திருமணம் செய்யவில்லை என்றால் காவல்நிலையம் செல்வேன் என மிரட்டியதால் பயந்து போன புரபு ராயபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
அதற்கு ஒரு லட்சம் செலவாகும் என்று கூறி இளம் பெண்ணிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார் பிரபு ஆனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்யாமல், அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டாமல் மாலை மட்டும் மாற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பெண் கர்ப்பம் அடைந்தார். வயிற்றில் கரு உருவானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் கூற அதற்கு 100 சவரன் நகை, 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் ரேவதி வலியுறுத்தியுள்ளார். கேட்ட பணத்தை தரவில்லை என்றால் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என பிரபு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தன்னை ஏமாற்றிய பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் பிரபுவை திங்கள் கிழமை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடந்தையாக செயல்பட்ட தாய் ரேவதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.