சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான முதியவர் .இவர் மத்திய அரசு கல்விநிறுவனம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் 40 வயதான ராதா. கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார். தான் ஏழ்மை நிலையில் இருப்பதால் சுயதொழில் ஒன்று தொடங்க இருப்பதாக கூறி தனது வீட்டு உரிமையாளர் பேராசிரியரிடம் ரூ 3 லட்சம் கடன் பெற்றுள்ளார் ராதா.
அதே போன்று சிறுக சிறுக ரூபாய் பத்துலட்சம் வரை கடன் பெற்றவர் வீட்டை காலிசெய்து சென்றுள்ளார். கொடுத்த கடனை திருப்பு கொடுக்காமல் , இழுத்தடித்துவந்த ராதா மீது பேராசிரியர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார் .இந்த வழக்கில் முறையாக ஆஜராகாத ராதாவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பேராசிரியரை தொடர்புக் கொண்ட ராதா உங்கள் பணத்தை திரும்பி கொடுக்க உள்ளதாக கூறி, கொடுங்கையூரில் உள்ள தோழி லட்சுமி வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளனர் .இதை குடித்த பேராசிரியர் சற்று நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.
Also Read :
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை... அதிர்ச்சி வீடியோ
அப்போது பேராசிரியருடன் தனது தோழி தனிமையில் இருப்பது போன்று ஆபாசமாக சித்தரித்து வீடியோ எடுத்துள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த பேராசியரை ராதா சித்தரித்து எடுத்த ஆபாசபடத்தை காட்டி மிரட்டியுள்ளார். அதிர்ந்து போன பேராசிரியர் கொடுத்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ராதா தனது தோழிகள் புஷ்பா,லட்சுமி மற்றும் அவரது கணவர் சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.