ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற பெண்... தற்காப்பு என்று விடுதலை செய்த திருவள்ளூர் எஸ்.பி

தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற பெண்... தற்காப்பு என்று விடுதலை செய்த திருவள்ளூர் எஸ்.பி

எஸ்.பி வருண்குமார்

எஸ்.பி வருண்குமார்

பலாத்காரம் செய்ய வந்த நபரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவே அமுதா அவரை அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற கொன்ற பட்டியல் இனப் பழங்குடி வகுப்பை சேர்ந்த இளம் பெண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவந்த நிலையில் அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பிரிவு 100 ன் கீழ் விடுதலை செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வழுதிகை மேடு ஏரிக்கரையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணையில் தங்கி வேலைப்பார்த்து வந்த

திருவாலங்காடு பகுதியைச் சார்ந்த பூங்காவனம்(26) என்பவரது மனைவி அமுதா(21) ஆகிய இருவரும் வேலையை முடித்து விட்டு இரவில் தனியாக உறங்கி கொண்டிருந்தனர்.

Also Read : சர்ச் பெயரில் பாலியல் சர்வீஸ் செய்த பாதிரியார்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

அப்போது அந்த வழியாக வந்த  ஒருவர் அமுதாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதா அடையாளம் தெரியாத அந்த நபரை அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.  இதை தொடர்ந்து பூங்காவனம் மற்றும் அவரது மனைவி அமுதாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read : தூக்கில் தொங்கிய காதல் மனைவி.. சடலத்தை இறக்கி வைத்து மதுபோதையில் தூங்கிய கணவன்

அதில் பலாத்காரம் செய்ய வந்த நபரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவே அமுதா அவரை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சட்டப்பிரிவு 100 ன் கீழ் தற்காப்பிற்காக நடைபெற்ற கொலை என்பதால் அவரை விடுதலை செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Thiruvallur