திருவள்ளூர் அருகே தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நீதி கேட்டு மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் மேற்கொண்டனர்
திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் கிராமத்தில் அமைந்த தனியார் கப்பல் கல்லூரி வளாகத்தில் அமைந்த தனியார் விடுதியில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை பாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம் தேதி புதன்கிழமை மதிய உணவு சாப்பிட்டதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி சுகாதாரத் துறையினர் வெள்ளவேடு காவல்துறையினர் அவர்களை மீட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் நேமம் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு விழுந்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனியார் விடுதியிலேயே மருத்துவ முகாம் அமைத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு பெண் தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Also Read: நெல்லை விபத்து: பள்ளி கல்வித்துறை அலட்சியபோக்கே காரணம் - ஓபிஎஸ் கண்டனம்
பின்னர் மறுநாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே தரமற்ற உணவை கொடுத்து வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் ஏற்படுத்த காரணமான தனியார் விடுதி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி விடுதி முன்பு உள்ள சென்னை திருப்பதி - தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தனியார் விடுதியின் அலட்சியத்தால் பெண் தொழிலாளர்கள் உரிய நியாயம் வழங்க வேண்டும். உண்மையை மறைக்கும் காவல்துறை வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினரை கண்டித்து திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் கிராமத்தில் பாக்ஸ்கான் தனியார் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நீதி வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாலை சுமார் 4 மணி அளவில் தொடங்கிய மறியல் தொடர்ந்து 7 மணி வரை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெண் தொழிலாளர்கள் போலீசாரின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையிலும் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் அமர்ந்து நள்ளிரவு முதல் தர்ணா போராட்டம் நடத்தியதால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Food, Food poison, Kancheepuram, Protest, Sriperumbudur Constituency, Tamil News, Thiruvallur, Woman