ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக வழக்கறிஞரை சிறையில் தள்ளிய பெண்.. திடீர் திருப்பமாக உறவினர்கள் சொன்ன அதிர்ச்சி சம்பவம்

ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக வழக்கறிஞரை சிறையில் தள்ளிய பெண்.. திடீர் திருப்பமாக உறவினர்கள் சொன்ன அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சொத்துக்காக பொய்யான புகார் கொடுத்துள்ளதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருவள்ளூரில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

  திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்தவர் டார்சன். இவர் வழக்கறிஞரான பணியாற்றி வருகிறார். வழக்கறிஞர் டார்சன் மீது பிரியா என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், விவாகரத்து தொடர்பாக வழக்கறிஞர் டார்சனை சந்தித்ததாகவும் அப்போது அவர் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும் தன்னை ஆபாசமாக படம்பிடித்த டார்சன் ரூபாய் 5 லட்சம் வரை பணம் பறித்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். இந்தப்புகாரையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்கறிஞர் டார்சன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

  Also Read: 3 திருமணம்.. வரதட்சணை பணத்தில் ஜாலி வாழ்க்கை - வங்கி பணியாளரை கம்பி எண்ண வைத்த முதல் மனைவி

  இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டார்சன் தம்பதியின் மகன் மகள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

  அந்த மனுவுடன் டார்சன் மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என புகார் அளித்த பிரியா என்ற பெண்ணும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் டார்ஜன் ப்ரியாவும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது அவர்கள் கூறும்போது, டார்சனும் பிரியாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒன்றாக சில காலம் வசித்து வந்தனர். இதனை தட்டிக்கேட்ட அவரது மனைவிக்கும் டார்சனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து டார்சனின் முதல் மனைவி லட்சுமி தாய்வீடு சென்று விட்டதால், பிரியா டார்ஜனை அடிக்கடி வீட்டில் வந்து பார்த்தவுடன் தங்குவது வழக்கமாக கொண்டு வந்தார், மேலும் இவர்கள் பெங்களூரு மும்பை என பல ஊர்களுக்குச் சென்று ஒன்றாக ஹனிமூன் கொண்டாடியுள்ளனர்.

  Also Read:  பணி முடித்து வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கால்டாக்சி ஓட்டுநர்

  இதனைத் தொடர்ந்து பிரியா கடம்பத்தூரில் உள்ள ஒரு சொத்தை தனது பெயரில் மாற்றி எழுதிக் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சொத்தை டார்சன் தர மறுத்ததால் மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என டார்ஜன் மிரட்டியதாக பொய்யான புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளி உள்ளார் என கூறினர். மேலும் இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி பொய்யான புகார் அளித்த சொத்துக்காக நாடகமாடிய பிரியாவை போலீசார் கைது செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Extramarital affair, Illegal affair, Lawyers