Home /News /tamil-nadu /

ஆவிகளின் சேட்டை.. மாந்திரீக பூஜை - கல்லூரி மாணவி மரணத்தில் நடந்தது என்ன?

ஆவிகளின் சேட்டை.. மாந்திரீக பூஜை - கல்லூரி மாணவி மரணத்தில் நடந்தது என்ன?

உயிரிழந்த கல்லூரி மாணவி

உயிரிழந்த கல்லூரி மாணவி

Thiruvallur: கொரோனா காலத்தில் 18 மாதங்களாக கல்லூரி மாணவி ஹேமாமாலினி சிகிச்சை பெற்றது எப்படி காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்  

  திருவள்ளூர் அருகே பரிகாரம் செய்ய வந்த கோவிலில் விஷம் குடித்ததாக கூறப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மூன்றாமாண்டு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமம். இங்கு ஓடை ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிவருகிறார். இவரிடம் தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார்.  கடந்த  18 மாதங்களாக ஆவி சேட்டையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்களால் அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

  Also Read: மாயமான பெண்.. பக்கத்துவீட்டில் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

  கோவில் பூசாரி முனுசாமி வீட்டில் அவரது மனைவியுடன் தங்கி    பூஜை செய்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹேமாமாலினி தனது பெரியம்மா இந்திராணி மற்றும் தங்கையுடன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார். இரவு பூஜை முடிந்து நள்ளிரவு பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு ஹேமமாலினிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர். பின்னர் இரவு ஹேமமாலினி உடன் வந்த அவரது தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் கோவில் பூசாரி முனுசாமிக்கு இட்லி தோசை சமைத்து கொடுத்ததுடன்  பரிமாறி பணிவிடை செய்து உள்ளனர்.  பூசாரி முனுசாமியின் அறையில்  ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர். இவர்களுடன் வந்த பெரியம்மா இந்திராணி அங்குள்ள அம்மன் கோவில் மண்டபத்தில்  கோவிலுக்கு வந்திருந்தவர்களுடன் படுத்து  தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில்  அதிகாலை ஹேமமாலினி  திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.கோவில் பூசாரி முனுசாமியின் தரப்பில் அவரது மனைவி  மட்டும் எழுந்து வந்து மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணியை எழுப்பி கூறியுள்ளார்.

  Also Read: தாயை கொன்றுவிட்டு, உடலை புதைக்க வீட்டுக்குள் விடிய விடிய குழிதோண்டிய மகன்.. கஞ்சா போதையில் வெறிச்செயல்..

  பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளானர். உயிருக்கு போராடியவரை ஆபத்தான நிலையில்  12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

  பின்னர் அங்கிருந்து இரண்டு மணி நேரம் கழித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவி ஹேமாமாலினி சிகிச்சை பலனின்றி  நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பென்னலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோவில் பூசாரி முனுசாமி தலைமறைவானார்.

  உடல்நலக்குறைவால் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனியார் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை என்ன? எதனால் அவர் விஷம் குடித்தார் ?என அங்குள்ள கோவில் பூசாரி முனுசாமியிடம்  உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் தரப்பில் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் விசாரணை செய்து தங்கள் மகளுக்கு நேர்ந்தது என்ன? என்று நியாயம் வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  எவ்வித அனுமதியும் இன்றி கோவிலில் இளம்பெண்களை தங்க வைக்க அனுமதி வழங்கியது யார். கொரோனா பெரும் தொற்று  காலத்தில் கோவிலில் மண்டபங்களில் பக்தர்களை தங்கி இரவு நேரங்களில் பரிகாரம், மாந்திரீக பூஜைகள் செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன். 18 மாதங்களாக சிகிச்சை என்ற பெயரில் தனியார் கல்லூரி மாணவி ஹேமாமாலினி போன்று பலர் அங்கு சிகிச்சை பெற்றது எப்படி. காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்து உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: College girl, Commit suicide, Crime News, Police investigation, Thiruvallur

  அடுத்த செய்தி