வீட்டை காணோம்! 2010ல் அரசு கட்டித் தருவதாக கூறிய கலைஞர் கான்கிரீட் வீடு எங்கே? 74 வயது முதியவர் புகார்

வீட்டை காணோம்! 2010ல் அரசு கட்டித் தருவதாக கூறிய கலைஞர் கான்கிரீட் வீடு எங்கே? 74 வயது முதியவர் புகார்

கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய கலைஞர் ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் குடியிருப்பு ஒன்று ஒதுக்கப்பட்டு வீடு கட்டித் தருவதற்கான அதன் ஆணையையும் பெற்றிருந்தார்.

  • Share this:
    திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தில் அரசு கட்டித் தருவதாக கூறிய கலைஞர் கான்கிரீட் வீடு எங்கே ஆதங்கத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் 74 வயது முதியவர் முதியவர் ஒருவர் தனக்கு தமிழக அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆவலோடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் புகைப்படத்தை ஒட்டி வழங்கப்பட்ட ஆணையை கையில் வைத்துக்கொண்டு பரிதாபமாக தன் நிலையை எடுத்துக்கூறி மனு அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் சொர்ணம். 74 வயது முதியவர். நாட்டு வைத்தியம் செய்து பிழைப்பு நடத்தி வந்தவர் தற்போது வயது முதிர்வு காரணமாக தங்குவதற்கு முறையான வீடின்றி அவதியுற்று வருகிறார்.

    கடந்த 40 ஆண்டுகளாக பூண்டி அருகே நெய்வேலி கிராமத்தில் குடிசை வீடு ஒன்றில் வசித்து வந்த இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய கலைஞர் ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் குடியிருப்பு ஒன்று ஒதுக்கப்பட்டு வீடு கட்டித் தருவதற்கான அதன் ஆணையையும் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டை கட்டி முடிக்காமலேயே வீடு கட்டப் பட்டதாக அதிகாரிகள் பணத்தை மட்டும் எடுத்துள்ளனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    Also read: அடையாளம் தெரியவில்லையா? விமான பயணத்தில் ஆச்சர்யம் அளித்த நபர்.. நினைவில் நின்ற பயணம் என நெகிழ்ந்த தயாநிதி மாறன்!!

    மேலும் இதுகுறித்து பலமுறை பூண்டி ஒன்றிய அலுவலகம் மற்றும் திருவள்ளூர் ஆட்சியரகத்தில் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளாததால் மனமுடைந்த அவர், இடிந்த நிலையில் உள்ள வீட்டில் தற்போது ஆபத்தான நிலையில் வசித்து வருகிறார்.

    இடையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இருந்ததால் தற்போது மீண்டும் திமுக ஆட்சி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அரசு அமைந்துள்ளதால் தனக்கு எப்படியும் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அப்போது வழங்கிய கலைஞர் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம் பெறுவதற்கான தகுதி அட்டையை கையில் ஏந்தியபடி தமிழக அரசு தனது நிலையை கனிவுடன் பரிசீலித்து அரசு கட்டித் தருவதாக கூறிய தனது வீட்டை உரியமுறையில் கட்டித்தர வேண்டும் என்றும் முதியோர் உதவி தொகை, டிஜிட்டல் குடும்ப அட்டை வழங்கவேண்டுமென  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேதனையோடு மனு அளித்தார்.

    மேலும் அம்முதியவர் கூறுகையில், தனக்கு அரசு கட்டித் தருவதாக கூறிய வீட்டை தற்போது எங்கே என்று தேடி வருகிறேன். பழைய படியே பாழடைந்த தனது வீட்டில் துன்பப்பட்டு வசித்து வருகிறேன். எனக்கு தமிழக அரசு 2010ல் வீடு ஒதுங்கியபோது 65 பேருக்கு வீடு கட்டி தருவதாக தெரிவித்தனர் என்றும் அதில் ஒரு சிலரைத் தவிர்த்து முறையாக யாருக்கும் வீடுகட்டி தரப்படவில்லை என தனது வேதனையை பதிவு செய்தார்.

    செய்தியாளர் - பார்த்தசாரதி
    Published by:Esakki Raja
    First published: