ஒன்றிய அரசா? மத்திய அரசா? திமுக - பாஜக கவுன்சிலர்களிடையே காரசார மோதல்..

ஒன்றிய அரசா? மத்திய அரசா?

நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடைபெறுவதாக பாஜக கவுன்சிலர் குற்றம்சாட்டியது கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்களை கோபமடையச் செய்தது.

  • Share this:
    பூண்டி   ஒன்றிய  கவுன்சிலர்கள்   கூட்டத்தில்  பாஜக -திமுக கவுன்சிலர்கள் இடையே ஒன்றிய அரசா? மத்திய அரசா ? என்ற காரசார விவாதத்திற்கு மத்தியில் தனது கைக்குழந்தையுடன்  கலந்து கொண்ட பெண் கவுன்சிலர் செயல் பாராட்டை பெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணா தலைமையில் துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றியத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Also Read:  ‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை நடிகரின் உணர்ச்சிமிகு இன்ஸ்டா பதிவு!

    இதில் திமுக கவுன்சிலர்ஞானமூர்த்திக்கும், பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் சண்முகம் இடையே மத்திய அரசா? ஒன்றிய அரசா? என காரசார விவாதம் நடைபெற்றது. மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடைபெறுவதாக பாஜக கவுன்சிலர் குற்றம்சாட்டியது கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்களை கோபமடையச் செய்தது.

    Also Read:  ’குழந்தைகள் எதிர்பார்ப்பாங்க’ ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்!

    இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது பின்னர் அவர்களை சமரசம் செய்த ஒன்றிய குழு தலைவர் வெங்கட் ரமணா தானும் ஒரு விவசாயி தான் , நெல் கொள்முதல் நிலையத்தில் அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் அதனாலேயே கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது என கூறிய அவர் தான் கூட 2,000 ரூபாய் கொடுத்து தான் தனது வயலில் விளைந்த நெல் மூட்டைகளை விற்றதாக கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இரண்டு கவுன்சிலர்களையும் சமரசம் செய்தார்.

    கூட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற பெண் கவுன்சிலர்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த கவுன்சிலர் கூட்டத்தில்திருப்பாச்சூர் ஒன்றிய கவுன்சிலர் மஞ்சு லிங்கேஷ்குமார் மக்களுக்கான உரிமையை  கேட்டு  பெற  பிறந்த சில நாட்களே ஆன பெண் கைக்குழந்தையுடன் கவுன்சிலர்கள் கூட்டத்தில்கலந்துகொண்டார். இச்செயல்  கூட்டத்தில் பங்கேற்ற பிற கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பாராட்டுக்களை பெற்றது....

    செய்தியாளர் ஆர்.எல். பார்த்தசாரதி, திருவள்ளூர்
    Published by:Arun
    First published: