Home /News /tamil-nadu /

அடிதடி தகராறு தட்டிக்கேட்ட வாலிபர் கொலை - 8 பேர் கைது

அடிதடி தகராறு தட்டிக்கேட்ட வாலிபர் கொலை - 8 பேர் கைது

இளைஞர் ஹரிதாஸ்

இளைஞர் ஹரிதாஸ்

அடிதடி தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.

    திருவள்ளூரில் அடிதடி தகராறில் காயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை திருவொற்றியூர்  சேர்ந்த ஹரிதாஸ்  ( வயது 24) பாரிமுனையில் உள்ள நாட்டு மருந்து கடையில் வேலை செய்து வந்ததுள்ளார். ஹரிதாஸூம் அதேப்பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான  சக்திவேல் ( வயது 44) ஆகிய இருவரும் சென்னை  மணலி புதுநகரில் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த ஒரு சில கும்பல் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டனர் உடனே அதை அறிந்த ஹரிதாஸ் தட்டி கேட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    Also Read:  வீடு புகுந்து பெண் போலீஸை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு..

    இருதரப்பினரும் அடித்துக் கொண்டதில் ஹரிதாஸ் சக்திவேலுக்கு இருவருக்கும் தலை மட்டும் கைகளில் பலத்த  காயம் ஏற்பட்டது.  ஹரிதாஸை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது அடிதடி  வழக்குப்பதிவு செய்தனர்.

    Also Read: டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா YouTube சேனல்கள் முடக்க நடவடிக்கை - கோவை மாவட்ட போலீஸார் தகவல்

    இதையடுத்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரிதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதுதொடர்பாக  அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ் (26 ),ஆசைமணி (26), பிரவீன்( 25 ),அன்பரசன்(25), முருகவேல்(22), மாதவன் (25) மருதமுத்து (29), விக்னேஷ்(28) ஆகிய 8 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் விசாரித்தனர்.

    செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Murder, Youths

    அடுத்த செய்தி