ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக நிர்வாகி மீது இளம் பெண் பரபரப்பு புகார்!!

திமுக நிர்வாகி மீது இளம் பெண் பரபரப்பு புகார்!!

எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு

எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு

திமுக கிளைச் செயலாளராக உள்ள முருகன் என்பவருக்கு   வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற அவசர  வேலை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் அருகே திருமண ஆசை கூறி 5 வருடமாக காதலித்து  ஏமாற்றியதாக திமுக கிளைச் செயலாளர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்  புகார்..

  திருவள்ளூர்  மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் மணி என்பவரது மகன்   முருகன் என்பவர்  திமுக கிளைச் செயலாளராக உள்ளார், அதே கிராமத்தை  சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் நிவேதா (வயது 21). இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது,

  இந்நிலையில் திமுக கிளைச் செயலாளராக உள்ள முருகன் என்பவருக்கு   வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற அவசர  வேலை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

  இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் முருகனிடம்  செல்போனில்   தொடர்பு கொண்டு கேட்டபோதுதன் நம்பரை டெலிட் பண்ணி விடுமாறு தெரிவித்துள்ளார்.

  தான் ஏமாந்ததை அறிந்த  இளம்பெண் நிவேதா, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அவருக்கு CSR கூட போட்டு கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே  பாதிக்கப்பட்ட பெண்   குடும்பத்தினருடன் திருவள்ளூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு  அளித்துள்ளார்.

  Also read:   ‘பெண் அதிகாரியின் டார்ச்சர் தாங்கமுடியல’ - அங்கன்வாடி ஊழியர் தற்கொலை முயற்சி - பரபரப்பு வீடியோ

  ஏழை வீட்டு பெண்ணான தன்னை ஏமாற்றி ஐந்து வருடங்களாக காதலித்து திமுக கிளைச் செயலாளர் ஏமாற்றி உள்ளதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார் நிவேதா.

  இதனிடையே புகார் கூறப்பட்ட முருகன் தரப்பில் கேட்டதற்கு மூன்றாண்டுகளாக நிவேதாவை அவர் காதலித்து வந்ததாகவும் இதனால் அவரது வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்ள கேட்டபோது அவர்கள் தரப்பில் மறுத்து விட்டதாகவும் எனவே வேறொரு பெண்ணை திருமணம் முடிக்க நிச்சயம் செய்யப்பட்டு இன்னும் நான்கு நாட்களில் திருமணம் ஆக இருந்த நிலையில் வேண்டுமென்றே மணமகளாக இருந்த அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று நிவேதா தகராறு செய்ததால் மனமுடைந்த அவர் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னை வேண்டுமென்றே பழிவாங்கவே இதுபோன்று நாடகம் ஆடுவதாகவும், நிவேதா பணிபுரிந்து வரும் அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும்  வேறு ஒரு நபரை அவர் காதலித்து ஊர் சுற்றி வருவதாகவும் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி தெரிவிக்கின்றனர்.

  செய்தியாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர்

  Published by:Arun
  First published:

  Tags: Cheating, DMK, Love issue