திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஜெயஸ்ரீ. இவர் பிபிஏ படித்து முடித்துள்ளார். ஜெயஸ்ரீ பிரபல தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த ஓராண்டாக காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயஸ்ரீ பட்டியலினத்தைச் சேர்ந்தவர்; இளவரசன் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இளவரசன் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை வழக்கம் போல வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு ஜெயஸ்ரீ தனது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். காலை 10 மணியளவில், வீட்டில் இருந்து சிறிது துாரத்தில் உள்ள முட்புதரில், துப்பட்டாவில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் அதைப் பார்த்து விட்டு மப்பேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவி்ததுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெயஸ்ரீயின் உடலில் சில காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அவரது செல்போன், ஏடிஎம் அட்டை மற்றும் பணப்பை ஆகியவற்றையும் காணவில்லை. தொடர் அதிர்ச்சியாக அவர் காதலித்து வந்த இளவரசனையும் காணவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த ஜெயஸ்ரீயின் தந்தை சுந்தரமூர்த்தி, தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான இளவரசனைத் தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram, Thiruvallur