முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்.. மாமியார் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!

அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்.. மாமியார் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா!

சித்ரா

சித்ரா

வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துவிட்டு நடிகர் மாதவன் நடித்த அலைபாயுதே திரைப்பட பாணியில் அவரவர் வீட்டிலேயே வசித்தனர்.

  • Last Updated :

திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டையில் கல்லூரியில் உடன் படித்த போது காதலித்து திருமணம் செய்து விட்டு குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் ஒருவர் உறவினர்களுடன் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த போது சோழவரம் அருகே உள்ள தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி படித்து வந்த மாணவி சித்ரா (வயது 21) என்பவருக்கும் ஊத்துக்கோட்டை  பேரூராட்சியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் பிரமோத் அதே கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் நட்பாகி பின்னர் காதல் மலர்ந்து இருவரும் சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

Also Read:   திருச்சியில் முதல்முறையாக சிறுத்தை தாக்குதல் - செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு அதிர்ச்சி!

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலை முன்பு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துவிட்டு நடிகர் மாதவன் நடித்த அலைபாயுதே  திரைப்பட பாணியில் அவரவர் வீட்டிலேயே வசித்தனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு விபரம் தெரிய வந்து இருவரும் பின்னர் சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். நல்ல நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வர குடும்பம் அமைதியாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read:  அரசியலுக்கே முழுக்கு.. எம்.பி பதவியும் ராஜினாமா. அதிரவைத்த பாஜகவின் பாபுல் சுப்ரியோ..

இதனால் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டு பிரமோத் தரப்பில் முடிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பிர மோத்தின் மனைவி சித்ரா தனது உறவினர்களுடன் வந்து  ஊத்துக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு கல்லூரியில் தன் உடன் பயின்றவரை காதலித்து திருமணம் செய்த பெண் ஒருவர் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி உறவினர்களுடன் ஊத்துக்கோட்டையில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்.எல்.பார்த்தசாரதி, செய்தியாளர் - திருவள்ளூர்

First published:

Tags: Police case, Thiruvallur