ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை அருகே ஒரு தீண்டாமை சுவர் - குமுறும் கிராம மக்கள்...

சென்னை அருகே ஒரு தீண்டாமை சுவர் - குமுறும் கிராம மக்கள்...

தீண்டாமை சுவர்

தீண்டாமை சுவர்

Wall of Untouchability | இது கோயிலுக்கு சொந்தமான நிலம் இதனை  இப்பகுதியில்  வாழுகின்ற பட்டியில் இன மக்கள்  பயன்படுத்த கூடாது என தீர்மாணித்து  இதனை சுற்றி கல்நட்டு கம்பி வேலி அமைத்து வடக்கேயும் தெற்கேயும் இரண்டு கேட்டு போட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தீண்டாமை சுற்றுச்சுவர் எழுப்பியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தோக்கமூர் கிராமமக்கள்.

  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஆரம்பாக்கம் அருகில் உள்ள தோக்கமூர் எனும்  கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகிறது. 'L' வடிவம் கொண்ட ஒரே வீதியை கொண்ட இக்கிராம மக்கள் பல ஆண்டுகாலமாக மா மற்றும் விவசாய  தொழிலையே நம்பி பிழைப்பு நடத்திவருகின்றனர்.

  இவர்களுக்கு சொந்தமாக பயிர்செய்ய நிலமோ, வீட்டுமனை பட்டாவோ இல்லாத நிலையில் அரசுவழங்கிய கிராமநத்த நிலத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு கிட்டதட்ட 30 ஆண்டுகாலமாக ஒரே வீட்டில் நான்கு ஜந்து குடும்பங்களாகவும்  இடவசதியின்றி அதிக சிர மத்துடன் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த தோக்கமூர் கிராமத்தின் அருகிலேயே அரசு கிராமநத்த புறம்போக்கு நிலத்தினை இப்பகுதியை சேர்ந்த உயர்சாதி வகுப்பினர் இது கோயிலுக்கு சொந்தமான நிலம் இதனை  இப்பகுதியில்  வாழுகின்ற பட்டியில் இன மக்கள்  பயன்படுத்த கூடாது என தீர்மாணித்து  இதனை சுற்றி கல்நட்டு கம்பி வேலி அமைத்து வடக்கேயும் தெற்கேயும் இரண்டு கேட்டு போட்டுள்ளனர்.

  Also read:  ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்... அமெரிக்கா எச்சரிக்கை

  இதனால் தோக்கமூர் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் அதிர்ச்சியடைந்து பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் செல்கின்ற மாணவ மாணவிகளும் வேலைக்கு செல்கின்றவர்களும் ரேஷன்கடை  பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கடைகளுக்கும் செல்ல முடியாமல் தங்களின் வாழ்தாரமே முடிங்கி உள்ள நிலை உருவாகி உள்ளதாகவும் கூறுகின்றனர்.. இது குறித்து இப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளிடத்தில் நேரில் சென்று பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் இதுகுறித்து கண்டு கொள்ளாமலும்  அலட்சியமாக இருந்து வருவதாகவும் அதுமட்டும் அல்லாமல் இக்கிராமத்தை சுற்றியுள்ள மூன்று கிராமத்து மாற்று சமூகத்து மக்களும் இந்த மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் கூறப்படுகிறது

  இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு சுற்றுச்சுவர் மதில் அமைக்கும் பணியையும்  வேலை களையும் தடுக்க வேண்டாம் என தெரிவிப்பதாக  இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தின் நிலையை அறிந்த புரட்சிபாரதம் கட்சியின் தலைவரும்    கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி, தங்கள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் தோக்கமூர் கிராமத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அந்த மக்களிடத்தில் தீண்டாமை வேலி குறித்து கேட்டறிந்து இது சம்மந்தமாக உயர் அதிகாரிகளிடத்தில்   பேசி தீர்வு காண உறுதியளித்ததார்.

  இதையும் படிங்க - உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்க செய்தியாளர் சுட்டுக்கொலை

  மேலும் அப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக ஒரே வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போதிய இடவசதியின்றி அவதிப்படுகின்ற தங்களுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தின் தீண்டாமை சுற்றுச் சுவர் கட்ட  வேலி போட்டதை அகற்றி அந்த கிராமநத்த அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்டு  மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க உதவுமாறும்  அப்பகுதிமக்கள்கோரிக்கை மனு அளித்ததனர்.

  மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி   இது சம்மந்தமாக அதிகாரிகளிடத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததார். தாமதம் இல்லாமல் அதிகாரிகள் இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

  அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என பொறுத்திருந்துபார்ப்போம்

  செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)

  Published by:Arun
  First published:

  Tags: Thiruvallur