திருவள்ளூர் அருகே வீட்டில் கொள்ளை போனதாக நாடகமாடிய நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். கடந்த 17ஆம் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இருவர் ஐந்து லட்சம் ரூபாயை பட்டப்பகலில் கொள்ளை அடித்து சென்றதாக சிசிடிவி கேமரா பதிவை வைத்து புகார் அளித்தனர். மேலும் அப்போது பிடிபட்ட நபர் ஒருவரையும் உடன் வந்த மற்றொருவர் அணிந்திருந்த வேட்டியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்ததில் காவல் ஆய்வாளரின் காலில் விழுந்த நபர் வீட்டில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை என்றும் திருட வந்த இடத்தில் தனது வேட்டியை பறி கொடுத்தது தான் மிச்சம் என்று வேதனையுடன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரை பிடித்து திருட முயற்சித்தாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருடு போகாமலேயே 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக கூறிய நபர் ராஜேசை எச்சரித்து மணவாளநகர் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்: பார்த்தசாரதி ( திருவள்ளூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.