Home /News /tamil-nadu /

தாயை கொன்றுவிட்டு, உடலை புதைக்க வீட்டுக்குள் விடிய விடிய குழிதோண்டிய மகன்.. கஞ்சா போதையில் வெறிச்செயல்..

தாயை கொன்றுவிட்டு, உடலை புதைக்க வீட்டுக்குள் விடிய விடிய குழிதோண்டிய மகன்.. கஞ்சா போதையில் வெறிச்செயல்..

கொலை செய்தவர்

கொலை செய்தவர்

Thiruvallur: பெற்ற மகனே தாயை கஞ்சா போதையில் கழுத்தறுத்துக் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    பூவிருந்தவல்லி அருகே வேலைக்குச் செல்லாத மகனை கண்டித்து திட்டிய தாயை கஞ்சா போதையில் கழுத்தறுத்து கொன்று வீட்டுக்குள்ளேயே புதைக்க முயன்ற மகன் கைது . வீட்டுக்குள்ளேயே இரவு முழுக்க பள்ளம் தோண்டி புதைக்க முயன்றவரை சகோதரர் அளித்த தகவலின் பேரில்  வெள்ளவேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள  கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா வயது 48, தனது கணவர் ஆனந்தனுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். மகள் மற்றும் பெரிய மகன் ராம்தாஸ் திருமணம் முடிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். மல்லிகாவின் கணவரும் வேலைக்கு சென்றவர் வெளியில் தங்கி விட  மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்த நிலையில் மல்லிகாவின் 2வது மகன் ஜெயபால் வீட்டிற்கு வந்த போது  வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக கஞ்சா குடித்து விட்டு ஊர் சுற்றுகிறாரே என கண்டித்துள்ளார்.  வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என திட்டியுள்ளார். இதனை அடுத்த கோபமடைந்த ஜெயபால், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் தனது தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

    Also read:  அதிமுக, பாஜவிற்கு காலத்திற்கும் அடிமை தான் - இயக்குனர் கரு.பழனியப்பன்

    உயிரிழந்த தாய் மல்லிகாவை வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி புதைப்பதற்காக குழியை தோன்டிய நிலையில் சோர்வடைந்த ஜெயபால் போதையில் அப்படியே அங்கேயே தூங்கி உள்ளார். அதிகாலையில் மீண்டும் எழுந்து இறந்த தாயை புதைப்பதற்காக வீட்டுக்குள்ளேயே குழி தோண்டும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு   அவரது அண்ணன் ராமதாஸ் வந்து பார்த்த போது தாயை கொன்று விட்டதாகவும் அதனால் வீட்டிற்குள்ளேயே புதைப்பதற்காக குழி தோன்டியதாக தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ராமதாஸ் வெள்ளவேடு  காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் கொலை செய்த ஜெயபாலை கைது செய்து காவலுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர் யார் என்று விசாரித்தனர் பின்னர் கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    Also read:  கிறிஸ்தவ மத அடையாளம் கொண்ட பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர்.

    பெற்ற மகனே தாயை கஞ்சா போதையில் கழுத்தறுத்துக் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
    Published by:Arun
    First published:

    Tags: Crime News, Murder, Thiruvallur

    அடுத்த செய்தி