முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு சில்வர் குடம் பரிசு!

தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு சில்வர் குடம் பரிசு!

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசு

தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசு

திருவள்ளூர் நகராட்சி சார்பில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேரை தேர்ந்தெடுத்து ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 1500 பேருக்கு  ஊராட்சி  சார்பில் சில்வர் குடம் பரிசு  வழங்கப்பட்டது.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசு துரிதப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற மேகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்களிடம் உள்ள வரவேற்பு காரணமாக இன்று மாநிலம் முழுவதும் 2வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக,  திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில்கோவிட் 19 சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமையில் ஊராட்சியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தடுப்பூசி செலுத்திகொள்ள வந்த  1500 பேருக்கு தலா 700 ரூபாய் மதிப்புள்ள குடம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இன்று 75 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி திருவலாங்காடு, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஏகுவார் பாளையம், ஆரம்பாக்கம், சூர பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி

திருவள்ளூரில் நகராட்சி சார்பில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேரை தேர்ந்தெடுத்து ஆண்ட்ராய்டு செல்போன் வழங்கப்படுமென நகராட்சி ஆணையர் சந்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ஆர்வத்துடன் ஆங்காங்கே இளைஞர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Thiruvallur