ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பஞ்சாயத்து தலைவர்கள்!

பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பஞ்சாயத்து தலைவர்கள்!

பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்

பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்

20 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தை தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடத்தில் மரக்கன்றுகள் நடக் கூடாது என்று கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருத்தணி அருகே பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருவள்ளூர் மாவட்டம் ஆர். கே. பேட்டை ஒன்றியம் பைவலசா ஊராட்சி மன்ற தலைவராக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவர் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

  அதன்படி, கிராமத்திலுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஏதுவாக 100 நாள் வேலை கூலி ஆட்கள் மூலம் பணிகள் நடைபெற்ற போது அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் பேசி  கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

  20 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தை தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடத்தில் மரக்கன்றுகள் நடக் கூடாது என்று மிரட்டியதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. எனினும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இதையும் படிங்க: நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் பதில்

  இதையடுத்து,  38 ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து கூட்டமைப்பு சார்பில் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியனர். காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலைந்து சென்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Police station, Thiruvallur