சோழவரம் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த துணைத்தலைவர் தடுப்பதாக அவர் மீது நடவடிக்கை கோரி ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் உடன் வந்து திருவள்ளுர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் புகார் மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அருமந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் விக்கிரமன். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணன் அவரை சாதிய பெயர் சொல்லி திட்டுவதும் ஊராட்சி மன்ற பணி செய்ய விடாமல் தடுப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளுர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் திரைப்பட இயக்குனர் கோபி நாயனாருடன் ஊராட்சி மன்ற தலைவர் சி.விக்ரமன் புகார் மனு அளித்தார்.
Also Read: மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமன்,
50 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் ஊராட்சி மன்ற தலைவராக ஆகி இருப்பதாகவும், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கண்ணன் பணி செய்ய விடாமல் சாதிய பாகுபாடு காட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவரின் பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தன்னை ஊர் பகுதியில் உள்ள கோவில் இடத்திற்கு சென்றாலும் தன்னை வர விடாமல் தடுப்பதும் ஊருக்குள்ளே வரவிடாமல் செய்வது போன்ற செயல்களில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணன் அவருடைய ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.
Also Read: டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..
துணைத்தலைவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கோப்புகள் காசோலைகளில் கையெழுத்து போடாமல் இருப்பதால் நிர்வாகம் செயல்படாமல் இருந்து வருவதாகவும், கோப்புகள் காசோலைகளில் கையெழுத்துப் போட கேட்டால் எனக்கு நீ மரியாதை கொடுக்கவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான் கையெழுத்து போடவில்லை என்று அவர் கூறியதாக ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 5-7-21 ஆம் ஆண்டு சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்திருப்பதாகவும் விக்கிரமன் கூறினார்,
துணை தலைவர் கண்ணன் தன்னை கார் வைத்து கொல்ல முயற்சி செய்ததாகவும், இதுதொடர்பாக சோழவரம் காவல் நிலையத்திலும் , வருவாய் கோட்டாட்சியரிடமும் புகார் கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
Also Read: ஊரே வியந்து பேசும் பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் யார்?.. Park Tae-Sang பற்றிய சுவாரஸ்ய தகவல்!
ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணனிடம் கேட்டபோது நான் அவரை சாதிய ரீதியாக திட்டியது இல்லை என்றும் நான் அனைத்து சமூகத்தையும் அரவணைத்து ஊரில் இருப்பதாகவும் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைத்து கோப்புகளும் கையெழுத்து போட்டு இருப்பதாகவும், கார் வைத்து கொல்ல சதி திட்டம் தீட்டியதாக பொய்யான புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டியல் இன தலைவர்கள் மீது சாதிய பாகுபாடு நிலவி வருவதாகவும் இதற்கு ஒரு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் வலியுறுத்தினார்.
ஆர்.எல்.பார்த்தசாரதி, செய்தியாளர் - திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvallur