பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 150 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், சுமார் 850 விவசாய குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாகவும் 55 லட்சம் ரூபாய் வரை பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் கர்லபாக்கம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தீடீர் கன மழையால் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 150 ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. முளை கட்டும் நிலையில் அவை உள்ளன. வயல்வெளிகளில் தேங்கிய தண்ணீரை வடிக்க முடியாத காரணத்தால்,நெற்பயிர்கள் சேதமானதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதிக மகசூல் கிடைக்கும் நெல் ரகங்களான பாபட்லா, 43,1010, ஆகிய ரக நெற்பயிற்கள் பயிரிடப்பட்டு வரும் தை மாதம் முதல் வாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராக இருந்ததாக கூறும் விவசாயிகள் இந்த நெல் ரகங்கள் ஒரு மூட்டைக்கு 1050 ரூபாய் வரை விலை போகக்கூடியதாகவும் தற்போது மழை நீர் விளைநிலங்களில் தேங்கியதால்
மொத்தமாக 150 ஏக்கர் விளை நிலங்களில் 55 லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சுமார் 850 விவசாய குடும்பங்கள் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில் விளை நிலங்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சேதமடைந்துள்ள நெல் பயிர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்த, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்க்கீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வருவாய், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர், உடனடியாக சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு மாதமாக பெய்த கன மழையிலும் நெற்பயிர்களை காப்பாற்றி, அறுவடை செய்யும் நேரத்தில் நெற்கதிர்கள் உடைந்து நிலத்திலேயே விழுந்துள்ளதால் இந்த வருடம் பெருத்த நஷ்டம் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: கன்னியப்பன்
இதையும் படிங்க: தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகங்கள்: 16 பேருக்கு பதவி உயர்வு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Thiruvallur, Very Heavy rain