திருத்தணியில், தனது தந்தை மீது வழக்குப் பதிவு செய்ததற்காக அவரது மகன் மனவருத்தத்தில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டது சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி(36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் அதிமுக திருத்தணி 15 வது வட்ட துணை செயலாளராக இருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை இவரது தந்தை பெற்றுள்ளார். அவர் வீட்டுக்குச் சென்று அந்த பொங்கல் தொகுப்பு பார்த்த பொழுது அந்த பொங்கல் தொகுப்பின் புளியில் இறந்துபோன பல்லி இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஊடகங்களுக்கு நந்தன் தகவல் தெரிவித்து இருந்தார். இது தொலைக்காட்சி செய்தித்தாள்களில் செய்தியாக வெளிவந்தது. இதனை அறிந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் பயனாளி நந்தன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருத்தணி ஆய்வாளர் ரமேஷ் பயனாளி நந்தன் மீது பிணையில் வெளியில் வர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்தார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பயனாளி நந்தன் தற்கொலை முயற்சி செய்யப்போவதாக அவரது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நந்தனின் மூத்த மகன் குப்புசாமி திடீரென இவரது வீட்டுக்குச் சென்று அறைக் கதவை மூடிக்கொண்டு வீட்டில் இருந்த பெட்ரோலை குப்புசாமி உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். தற்கொலைக்கு முயற்சி செய்த அவரது அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் வந்து குப்புசாமி காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் தீக்காயம் அதிகளவில் குப்புசாமியின் உடலில் பரவியது.
ஆம்புலன்ஸ் உதவியுடன் குப்புசாமியை திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார்.
செய்தியாளர்: பார்த்தசாரதி ( திருவள்ளூர்)
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Pongal