முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருத்தணியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை - பொதுமக்கள் அச்சம்

திருத்தணியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை - பொதுமக்கள் அச்சம்

திருவள்ளூர் கொள்ளை

திருவள்ளூர் கொள்ளை

திருத்தணியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனி மாங்காடு கிராமம் யாதவா தெருவில் வசித்து வருபவர் கோபால் இவர் சென்னையில் உள்ள அவரது மகன் சுரேஷ்பாபு வீட்டிற்கு தனது பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தபோது இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளி 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அதே தெருவில் இரண்டு வீடுகள் தள்ளி வசித்து வருபவர் சுரேஷ்பாபு இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வேலைக்கு சென்றிருந்தார். எதிரில் அவர் வேறு ஒரு புதிய வீடு கட்டி உள்ளார். அதில் அவரது மனைவி குழந்தைகள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி கொலுசு விலை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்த கனகம்மாசத்திரம் காவல் ஆய்வாளர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சசிக்குமார் ( திருவள்ளூர்)

First published:

Tags: Crime News, Gold Theft, Police, Theft, Thiruvallur