ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்

பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்

பெரியார் சிலை

பெரியார் சிலை

பெரியார் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொன்னேரியில் உள்ள பெரியார் திருவுருவச் சிலையில் உள்ள மூக்குக் கண்ணாடி உடைத்து சேதப்படுத்திய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் திருவுருவ சிலையில்  மூக்கு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வந்த நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read:  ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி

தொடர்ந்து பொன்னேரி பகுதியை சேர்ந்த செல்லக்கிளி என்பவர் சிலையை சேதப்படுத்தியதாக கூறி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். எதற்காக அவர் பெரியார் சிலையை  சேதப்படுத்தினார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சற்று மனநிலை சரியில்லாத இருந்த நிலையில்  அவர் எதற்காக சிலையை சேதப்படுத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேதமாகிய சிலையை தற்காலிகமாக மூடி காவல்துறையினர்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெரியார் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)

First published:

Tags: Periyar, Periyar Statue, Police