திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலையில் நடைபெற்று வரும் ராணுவ தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளடக்கிய மாபெரும் கண்காட்சியை தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். பின்னர் அங்கு வந்த குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சென்னையை அடுத்த ஆவடி டேங்க் பேக்டரி வளாகத்தில் படை உடைத் தொழிற்சாலை, கனரக வாகனம் தொழிற்சாலை சார்பில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரும் 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத தலைக்கவசம், குண்டு துளைக்காத பாதுகாப்பு ஜாக்கெட், பாராசூட், நவீன டெண்ட் ஆகியவற்றை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கனரக வாகன தொழிற்சாலையின் கண்காட்சியை பங்கேற்று பார்வையிட்ட அவர், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பீரங்கி டாங்கி உள்ளிட்டவைகளை நேரில் சென்று கண்டு ரசித்தார். மற்றும், உதிரி பாகங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியும் பார்வையிட்டார்.
பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அர்ஜுன் டாங்கி மேலே ஏறி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அங்கே CVRDE யின் விஞ்ஞானிகள்தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு இயந்திரத்தின் தன்மையும் அதன் உபயோகம் பயன்பாடு உள்ளிட்டவற்றை விளக்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், இந்த கண்காட்சியின் மூலம் நமது ராணுவ வீரர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இந்த கருவிகளை எல்லாம் இயக்குகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கண்காட்சியை வைத்திருக்கிறார்கள். இந்த கண்காட்சி உண்மையிலேயே குழந்தைகளுக்கு மிகவும் ஒரு தேசப்பற்றை ஊட்டுவதாக இருக்கும்.
ஒமைக்ரான் வந்துள்ள நிலையில் கட்டுப்பாடோடு எல்லோரும் இருக்க வேண்டும். தடுப்பூசி எல்லாரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், எல்லாருமே மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாய படுத்தப்படுகிறது. இதை ஏன் இவ்வளவு கட்டாயப்படுத்துகிறோம் என்றால், ஒமைக்ரானில் நாம் மாட்டிககொள்ள கூடாது என்ற காரணத்தினால் தான் என்றார்,
Must Read : மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு- எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கிறாரா?
மேலும், வெளிநாடுகளில் ஒமைக்ரானுக்கு பயந்து தடுப்பூசியை செலுத்திகொள்ள வரிசையில நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வரிசையில்போய் நின்னு மக்களுக்கு ஊசி போட்டு கொண்டு இருக்கிறோம். எனினும் மக்கள் ஊசி போட முன்வர மறுக்கிறார்கள். நீங்க எல்லாரும் பாதுகாப்பா இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
செய்தியாளர் - கன்னியப்பன், ஆவடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army, Avadi, Tamilisai Soundararajan