ஆந்திராவுக்கு எல்லைதாண்டி படையெடுக்கும் தமிழக மதுபிரியர்கள்!

ஆந்திர மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்

தமிழகத்தில் தான் ஊரடங்கு ஆந்திராவில் இல்லை.

  • Share this:
    தமிழகத்தில் தான் ஊரடங்கு ஆந்திராவில் இல்லை. காலை 6 மணி முதல் 12 மணி வரை  மதுபான கடைகள் இயங்குவதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்த கடைகளில் எல்லை தாண்டி சென்று எல்லை மீறி மது வாங்க குவியும் மதுபான பிரியர்கள் ..

    திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய மாவட்டமாகும். தமிழகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கோரோனா பரவலின் காரணமாக மூடப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர மாநில எல்லைகளில் அமைந்த அம்மாநில மதுபான கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை ஆந்திர அரசு செயல்பட அனுமதி அளித்து இருந்ததை அறிந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புகுளம் , ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கண்ணம்பாக்கம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, கேகே சத்திரம் பகுதி மதுப்பிரியர்கள் மாநில எல்லையை கடந்து சென்று இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் அங்குள்ள மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.

    ஆந்திர மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்


    தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து ஊரடங்கு கடைபிடித்து வரும் சூழலில் மதுப் பிரியர்கள் எல்லை தாண்டி சென்று மது வாங்கி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Read More:   ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வடமாநில தொழிலாளர்கள்; கோதுமை மாவு கொடுத்து உதவும் மதுரைக்காரர்கள்!




    இதனை தடுக்க உரிய முறையில் எல்லையோர சோதனைச் சாவடிகளில் குறிப்பாக ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பள்ளிப்பட்டு, ஆர்கே.பேட்டை, பென்னலூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை , கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆகிய காவல் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    திருவள்ளூர் செய்தியாளர் பார்த்தசாரதி
    Published by:Arun
    First published: