• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காசு கொடுத்தால் சர்வே பண்றேன் - லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்

காசு கொடுத்தால் சர்வே பண்றேன் - லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்

கைதான சர்வேயர்

கைதான சர்வேயர்

பெண் சர்வேயரை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆர்.கே. பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
    நில அளவீடு செய்ய ரூ. 3.500 லஞ்சம் ஆர்கே பேட்டை பெண் சர்வேயர் கைது. லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார்  கையும் களவுமாக பிடித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம்    ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயராக  பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி (30). அவரை மாலாபுரத்தைச் சேர்ந்த  விவசாயி திருவேங்கடம் என்பவரின் மனைவி புவனேஸ்வரி என்பவர்  அவருக்கு சொந்தமான வீட்டுமனை  நில அளவீடு செய்ய சர்வேயர் ஸ்ரீதேவியை சில தினங்களுக்கு முன்பு அணுகியுள்ளார்.இருப்பினும்  பலமுறை அலைக்கழித்த நிலையில்  இறுதியில் ரூபாய் 3. 500 வழங்கினால்  சர்வே செய்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    லஞ்சம் வழங்க விருப்பமில்லாத புவனேஷ்வரி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழங்கிய ரசாயணம் தடவிய பணத்தை  இன்று  மாலை பாலாபுரத்திற்கு சென்ற சர்வேயர் ஸ்ரீதேவியிடம்  வாங்கியபோது அதே பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நில அளவீடு செய்ய ரூ. 3 500 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் சர்வேயரை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆர்.கே. பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : சசிக்குமார்( திருவள்ளூர்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: