Home /News /tamil-nadu /

“சென்னை கோட்டை நோக்கி நடைபயணம்“ கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

“சென்னை கோட்டை நோக்கி நடைபயணம்“ கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

“சென்னை கோட்டை நோக்கி நடைபயணம்“ கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

“சென்னை கோட்டை நோக்கி நடைபயணம்“ கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Thiruvallur Sugarcane Farmers Protest | கரும்பு விவசாயிகள் மேற்கொண் சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் ஆர்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்த வேண்டும் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கரும்பு விவசாயிகள் மேற்கொண் சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் ஆர்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருத்தணி சர்க்கரை ஆலை முன்பு இருந்து சென்னை கோட்டை நோக்கி நடை பயணம் மேற்கொண்டபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்பு செய்து மேம்படுத்திட வேண்டும், இணை மின் உற்பத்தி எத்தனால் உற்பத்தி நிலையங்களை அமைத்திட வேண்டும், வருவாய் பங்கீட்டு சட்டத்தை வாபஸ் பெற்றிட வேண்டும்,  வெட்டுக்கூலி  பிரச்சனையை முறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விரைவாக செய்திட வேண்டும். சமீபத்தில் தமிழக பட்ஜெட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யவில்லை என்பதும்ஏமாற்றமளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 800 ஏக்கர் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6,100 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் 2500 லட்சம் அரவை செய்ய மட்டுமே தீர்மானம் செய்துள்ளனர் இப்படி உள்ள இந்த நிலையை மேம்படுத்தி செய்ய தமிழக அரசு செய்ய வேண்டுமென்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்து தான் கோட்டையை நோக்கி நடைபயணம்  ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இவர்களை தடுத்து நிறுத்தி கரும்பு விவசாயிகளை போலீசார் கைது செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு திருவலாங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு போடப்பட்டிருந்த என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : சசிக்குமார், திருவள்ளூர்
Published by:Vijay R
First published:

Tags: Thiruvallur

அடுத்த செய்தி