ஆவடி HVF எஸ்டேட் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆவடி குற்ற பிரிவு போலீசார் அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என அணைவரையும் கிழே இறக்கி தோப்புக்கரணம் போட வைத்து அறிவுரை வழங்கி நூதன தண்டனை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
ஆவடி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது ஓடும் மாநகர பேருந்துகளில் அஜாக்கிரதையாக பயணம் செய்வது, சாகசங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனைத் தட்டிக் கேட்கும் ஓட்டுனர்கள், நடத்துனர்களை மாணவர்கள் அவதூறாக பேசி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்து வந்தனர். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சலராஜா தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்னர்.
நேற்று மாலை ஆவடியிலிருந்து கண்ணியம்மன் நகர், கோயில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை அடுத்து 30 க்கு மேற்பட்ட மாணவர்களை போலீஸார் பேருந்திலிருந்து இறக்கினர். பின்னர் போலீஸார் அவர்களின் பள்ளி விவரங்களை சேகரித்தும், தோப்புகரணம் போட சொல்லியும் தண்டனை வழங்கினர். மேலும் போலீசார் அவர்களுக்கு அறிவுரைகளைக் கூறி எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர்.

ஆவடி போலீசார்
Must Read : வீசி எறியும் பாட்டில்களால் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.. மதுக்கரை வனத்தில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
மேலும், சமூக ஆர்வலர்கள் இதுபற்றிக் கூறுகையில் ஆவடி அரசு பேருந்து பணிமனையில் இருந்து பள்ளிகள் விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகும் என கூறுகின்றனர்.
செய்தியாளர் - கன்னியப்பன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.