Home /News /tamil-nadu /

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்... போக்சோவில் மனைவியுடன் சாமியார் கைது

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்... போக்சோவில் மனைவியுடன் சாமியார் கைது

11-ம் வகுப்பு படித்தது முதல், அந்தப்பெண், குழந்தை பெற்ற பின்னரும் தனது ஆசைக்கு இணங்குமாறு சாமியார் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது.

    கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து, மாணவியை தொடர் பலாத்காரம் செய்த புகாரின்பேரில் சாமியார் ஒருவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகர் விநாயகர் கோவில் தெருவில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2012-ல் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, விநாயகபுரம் சூரப்பட்டு ரோடு லக்ஷ்மிகாந்த் அம்மாள் தெருவில் உள்ள ஷீரடி புரம் சர்வ சக்தி பீடத்தில் நிர்வாகியான சங்கர நாராயணன் என்பவரிடம், தனது பாட்டியுடன் விபூதி வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் ப்ளஸ் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    பின்னர் அடுத்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் சமயத்தில் மறுபடியும் அதே ஆசிரமத்தில் விபூதி வாங்க சென்ற மாணவியை சங்கரநாராயணன் அவரது மனைவி புஷ்பா ஆகிய இருவரும் ஜூஸ் கொடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க : 80 நாய்க்குட்டிகளை கொன்ற 2 கொலைகார குரங்குகள் சிறைபிடிப்பு... கேங் வார் என விசாரணையில் தகவல்

    அதைக் குடித்து மயக்க நிலைக்கு சென்ற மாணவியை சங்கர நாராயணன் கற்பழித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் இளம்பெண் 2018ஆம் ஆண்டு திருமணமாகி தனது கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    இதையும் படிங்க : தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்

    பின்னர் திருமணமான இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆசிரமத்திற்கு வரவழைத்து பயமுறுத்தி சாமியார் சங்கர நாராயணன் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க : விஜய் டிவி நந்தினி காட்டில் அடை மழை.. பிரபல நடிகர் படத்தில் கமிட்!

    இதனால் கர்ப்பம் அடைந்த இளம்பெண் ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுக்க நேரிட்டது. மறுபடியும் மேலும் தனது பாலியல் ஆசைக்கு இணங்க வரவேண்டுமென மிரட்டி வந்ததால், இதுகுறித்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்தார் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Pocso, POCSO case

    அடுத்த செய்தி