Home /News /tamil-nadu /

இரண்டாவது மனைவியுடன் காவலாளி தூக்கிட்டு தற்கொலை - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

இரண்டாவது மனைவியுடன் காவலாளி தூக்கிட்டு தற்கொலை - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

காவலாளி தற்கொலை

காவலாளி தற்கொலை

Thiruvallur | கடன் தொல்லையால் தம்பதியினர் திடீரென வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை காவலாளி வீட்டிலேயே இரண்டாவது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ் நல்லாத்தூர் சங்கராச்சாரி தெருவில் வசித்தவர்கள் வடிவேல்(வயது 42), ரேவதி (வயது32) இவர்களது ஒரே மகள் பூஜா 13 வயது. இவர் அருகில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி பள்ளிக்கு சென்ற நிலையில்  வடிவேல்  ரேவதி இருவரும் வீட்டிலேயே  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி தாய் தந்தை இருவரும் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுமியின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    Also Read: நண்பர்களுடன் சேர்ந்து, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமன்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

    இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர்  மணவாளநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த  போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வடிவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவி தீபிகா 14 வயது லிங்கேஸ்வரன் 4வயது என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மனைவி ரேவதியுடன் வசித்து வந்த வடிவேல் சமீபத்தில் இரண்டாவது மனைவி ரேவதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடியது  புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றையும் வாங்கி கொடுத்து சந்தோஷமாக  வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் திடீரென இருவரும் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் இவர்கள் இருவரும் ஏதேனும் கடன் தொல்லையால் தூக்கிட்டு கொண்டனரா? அல்லது வேறு பிரச்சனையா ?என்ற கோணத்தில் மணவாளன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: பார்த்த சாரதி (திருவள்ளூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Police, Thiruvallur

    அடுத்த செய்தி