திருச்சி சிவா மகன் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தேம்ஸ் நதி போன்றது யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை என்று தெரித்துள்ளார்.
எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ.பரந்தாமன் அவர்களின் தந்தை 16ம் நாள் திருவுருவ படம் திறப்பு நிகழ்வு திருநின்றவூரில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்று திரு உருவ படத்தை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது குறித்த கேள்விக்கு எது நியாயமோ, எது நாட்டுக்கு ஏற்றதோ, எதை சமுதாயம் ஏற்குமோ அதை தான் செய்துள்ளார் என்று கூறினார்.
Must Read : ஓடி ஒளியும் ராஜபக்சே... கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இடதுசாரி கட்சியினர்
திருச்சி சிவா மகன் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு போனபோதே கவலை படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம், திமுக தேம்ஸ் நதி மாதரி யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை, தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக போய் கொண்டிருக்கிறது இன்னும் 100 ஆண்டுகள் போகும் என பதிலளித்தார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சில தினங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - கன்னியப்பன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.