திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜவஹர் என்ற ரவுடி கத்தியால் குத்தியும், வெட்டியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர். இவரை மர்ம நபர்கள் நள்ளிரவு அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஏப்ரல் 26-ம் தேதி வேன் பாக்கம் பள்ளம் பகுதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததை பொன்னேரி போலீசார் பறிமுதல் செய்து கார்த்திக்கை கைது செய்து பொன்னேரி போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதில் தப்பி ஓடிய ஜவகரை கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது . இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிக்க தனிப்படை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
செய்தியாளர் : பார்த்தசாரதி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.