ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காவலாளியை கட்டிப்போட்டு நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - வடமாநில கும்பலின் கைவரிசையா விசாரிக்கும் காவல்துறை

காவலாளியை கட்டிப்போட்டு நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - வடமாநில கும்பலின் கைவரிசையா விசாரிக்கும் காவல்துறை

கொள்ளை முயற்சி

கொள்ளை முயற்சி

காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பல் வட மாநில கொள்ளையர்களா  என போலீஸார் விசாரணை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் மாவட்டம்செங்குன்றத்தில் காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி. வட மாநில கொள்ளையர்களா என போலீசார் விசாரணை.

  திருவள்ளூர் மாவட்டம்  செங்குன்றம் ஜிஎன்டி ரோடு  அனுகுசாலை  காமராஜ் நகர் நேதாஜி தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு  வருகிறது.  இங்கு சுமார் 20 பேர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று அதிகாலை இந்த நிதி நிறுவனத்தில் காவலாளியாக இருந்த சிவானந்தம் என்பவரை  கைகால்களை கட்டிப்போட்டு 6 பேர் கொண்ட கும்பல் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் கொண்டு துளையிட்டு கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .

  Also Read: 2 லிட்டர் பெட்ரோல் இலவசமா வேணுமா.. லீவு போடாம வேலைக்கு வாங்க - திருப்பூரை கலக்கும் விளம்பரம்

  ஆனால் சிறிது நேரத்தில் மர்ம கும்பல் சுதாரித்துக் கொண்டு உடனே அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. பின்னர்  காவலாளி அருகில் உள்ள கட்டிடத்தின் காவலாளிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்து காவலாளியின் கட்டை அவிழ்த்து  உதவினார்.

  இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். நிதி நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தபோது உள்ளே பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

  Also Read: விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பல் வட மாநில கொள்ளையர்களா  என விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளியை கட்டிப்போட்டு நிதிநிறுவனத்தின் ஷட்டரை துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, (திருவள்ளூர்)

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Bank, Crime | குற்றச் செய்திகள், Theft, Thiruvallur