Home /News /tamil-nadu /

356 ஏக்கர் பரப்பளவுள்ள ஈக்காடு ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்... நீதிமன்ற தீர்ப்பினால் அதிரடி ஆக்‌ஷன்...

356 ஏக்கர் பரப்பளவுள்ள ஈக்காடு ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்... நீதிமன்ற தீர்ப்பினால் அதிரடி ஆக்‌ஷன்...

ஆக்கிரமிப்பை வருவாய்துறையினர் அகற்றினர்

ஆக்கிரமிப்பை வருவாய்துறையினர் அகற்றினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
    திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை வருவாய்துறையினர் தொடங்கி உள்ளனர். 

    திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் சுமார் 356 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி பல ஆண்டு காலமாக ஆக்கிரமித்து, செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வந்தனர்.

    இதனை அறிந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் பேரில், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் அருணா, வருவாய் அலுவலர் கணேஷ் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி ஆகியோர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் விவசாய ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்தனர்.

    Also read... வேலூரில் இரவு நேரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள்...

    இதையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் கூறுகையில், பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. அதுபோல் 356 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈக்காடு பெரிய ஏரி முழுவதுமாக ஆக்கிரமிப்பில் இருந்ததை அறிந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்பொழுது முழுமையான நீர் நிலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்தி நீர் சேமிப்பின் அளவை அதிகபடுத்த அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

    -செய்தியாளர்: பார்த்தசாரதி.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Lake, Thiruvallur

    அடுத்த செய்தி