ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Sasikala: சசிகலாவுக்கு பதிலடி: அமமுக நிர்வாகிகளை குறி வைக்கிறதா அதிமுக தலைமை?

Sasikala: சசிகலாவுக்கு பதிலடி: அமமுக நிர்வாகிகளை குறி வைக்கிறதா அதிமுக தலைமை?

 சசிகலா, பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

சசிகலா, பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொன் ராஜா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கடந்த சில தினங்களாக அதிமுகவினரிடையே சசிகலா தொலைபேசியில் உரையாடி வருவது அதிமுக தலைமைக்கான ‘செக்’ ஆக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், தற்போது அமமுகவினரை வளைத்துப் போட்டு சசிகலாவிற்கு பதிலடி கொடுக்க அதிமுக திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

  அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளிடையே சசிகலா தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் அரங்கில் அவருக்கான ரீ-எண்ட்ரிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

  இந்த நிலையில்,  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொன் ராஜா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து விலகி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் மாவட்ட கழக செயலாளர் பலராமன், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோர் உடன் சென்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இணைந்துள்ள பொன்ராஜா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

  Also Read:  'மினி பாகிஸ்தான்' என ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: லைக்ஸுக்காக இளைஞர் செய்த விபரீதம்!

  மாவட்டம் தோறும் அதிமுக நிர்வாகிகளை சசிகலா சந்திக்க முடிவு செய்திருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தேர்தல்களில் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

  இபிஎஸ் உடன் பொன்ராஜா

  இதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிற மாவட்ட நிர்வாகிகளையும் கட்சியில் இணைக்க அதிமுக தலைமை முனைப்பு காட்டி வருகிறது.

  Also Read:    1978ம் ஆண்டு முதல் அரசுக்கு வாடகை பாக்கி.. RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

  சட்டமன்ற தேர்தல் தோல்வியாலும், தலைமைகளுக்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படும் இந்த நேரத்தில் சசிகலாவின் எண்ட்ரி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சசிகலா அணியினராக கருதப்படும் அமமுக கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை குறி வைத்திருப்பது சசிகலாவிற்கான பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எதிர்வரும் நாட்களில் அதிமுகவில் சசிகலா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறார் என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

  இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜாவிற்கு பதிலாக பி.வி.சங்கர் ராஜாவை மாவட்ட கழக செயலாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்

  திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் பார்த்தசாரதி

  Published by:Arun
  First published:

  Tags: AIADMK, O Pannerselvam, OPS - EPS, Politics, Sasikala, Thiruvallur