சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மைதானத்தில் பயிற்சியின்போது பாய்ந்த துப்பாக்கி குண்டு, வீட்டில் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.
ஆவடி 3-வது வார்டில் உள்ள மிட்டனமல்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில், சிஆர்பிஎஃப் பயிற்சி மைதானம் உள்ளது. இன்று காலை உறக்கத்தில் இருந்து ராஜேஷ் எழுந்து பார்த்தபோது, பீரோ கண்ணாடி உடைந்து காணப்பட்டுள்ளது.
மேற்கூரையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் ஓட்டிலும் துளை காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜேஷ் வீட்டில் தேடி பார்த்தபோது, அங்கு துப்பாக்கி குண்டு இருந்துள்ளது.
இதுகுறித்து ராஜேஷ் தகவல் அளிக்க, முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also read... மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு சீல்
இது தொடர்பாக சிஆர்பிஎப் டிஐஜி தினகரனை நமது செய்தியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தங்கள் பயிற்சி மைதானத்தில் இருந்து துப்பாக்கி குண்டு வந்தது என்ற தகவலை மறுத்துள்ளார்.
-செய்தியாளர்: கன்னியப்பன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.