இருளர் மக்கள் பயன்பாட்டில் இருந்த 4 ஏக்கர் நிலத்துக்கு போலி பட்டா... வருவாய்த்துறையினரை விசாரிக்க வலியுறுத்தி போராட்டம்..
இருளர் மக்கள் பயன்பாட்டில் இருந்த 4 ஏக்கர் நிலத்துக்கு போலி பட்டா... வருவாய்த்துறையினரை விசாரிக்க வலியுறுத்தி போராட்டம்..
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
Thiruvallur District | திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர்பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பழவேற்காடு அருகே இருளர் இன மக்களின் பயன்பாட்டில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை, போலி பட்டா மூலம் தனிநபர்களுக்கு வருவாய்துறையினர் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர்பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் தங்கள் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 4 ஏக்கர் 13 சென்ட் இடத்தில் சுடுகாடு உள்ள நிலையில் வருவாய் துறையினர் தனியாருக்கு பட்டா வழங்கி உள்ளதாகவும், தாங்கள் பயன்படுத்தி வந்த பகுதியில் சுடுகாடு உள்ள இடத்தில் தடுப்பு வேலி அமைக்க முயல்வதாகவும், அதனை தடுத்து நிறுத்தி இடத்தை மீட்டு தங்களுக்கு வழங்க கோரி வட்டாட்சியர் முதல் மாவட்டஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பழவேற்காடு கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 31ஆம் தேதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக கூறிய நிலையில் தாங்கள் படகுகள் நிறுத்தி தொழில் செய்யும் இடத்தை போலியாக நான்கு பேருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் செய்ய படகுகளை நிறுத்தவும் வீட்டுமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு அந்த இடத்தைமீட்டுவழங்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழவேற்காடு ஏரியை ஒட்டி வெள்ளக் காலங்களில் மழை நீர் வடியும் இடத்தில் சுமார் 4 ஏக்கர் 13 சென்டில் போலியாக பட்டா வழங்கியுள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செய்தியாளர்: பார்த்தசாரதி.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.